ஆப்நகரம்

பிஎம் கிசான் பணம் ரூ.2,000: விவசாயிகளுக்கு முக்கிய அப்டேட்!

பிஎம் கிசான் திட்டப் பயனாளிகள் தங்களது ஸ்டேட்டஸ் சரிபார்ப்புக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Jun 2021, 7:04 pm
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசிடமிருந்து நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. கொரோனா வந்த பிறகு மக்களிடையே நிதி நெருக்கடி நிலவுவதால் ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு விரைந்து பணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டு அதன்படி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil pm kisan


பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்கள் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.

மாதம் ரூ.3,000 பென்சன்... உடனே இந்தத் திட்டத்தில் சேருங்க!
இத்திட்டத்தின் கீழ் எட்டாவது தவணைப் பணம் ரூ.2,000 மே 14ஆம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. இந்த நிதியுதவி சுமார் 9.5 கோடி விவசாயிகளுக்குக் கிடைத்தது. இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் தங்களது ஸ்டேடஸ் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள பிஎம் கிசான் மொபைல் ஆப் மூலமாகவும் இனி பார்க்கலாம். இதுகுறித்து டிஜிட்டல் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் செய்தி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைல் செயலியை வாடிக்கையாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்