ஆப்நகரம்

ரூ.2000: புத்தாண்டுக்குள் பணம் கிடைக்கும்... விவசாயிகள் மகிழ்ச்சி!

பிஎம் கிசான் திட்டத்தின் 10ஆவது தவணைப் பணம் புத்தாண்டுக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 26 Nov 2021, 12:41 pm
இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டு மத்திய மோடி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) எனப்படும் விவசாய நிதியுதவித் திட்டம். இத்திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக மொத்தம் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் கிடைக்கும். இதுவரையில் மொத்தம் 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
Samayam Tamil pm kisan


இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் 10ஆவது தவணைப் பணம் டிசம்பர் மாத மத்தியில் கிடைக்கும் என்று சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இந்தப் பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். அடுத்த தவணையிலிருந்து 2000 ரூபாய்க்குப் பதிலாக 4000 ரூபாய் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் அரசிடமிருந்து வெளியாகவில்லை. நிறைப் பேர் இப்போதே தங்களது வங்கிக் கணக்கில் பணம் வந்துவிட்டதா எனப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

சிலிண்டருக்கு மீண்டும் மானியம்! பொதுமக்கள் ஹேப்பி!

விவசாயிகள் தங்களது பெயர் மற்றும் தவணைப் பணம் குறித்த விவரங்களை ஆன்லைன் மூலமாகவே சரிபார்க்கலாம். அதற்கு https://pmkisan.gov.in/ என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும். அதில் 'farmers corner' என்ற ஆப்சன் இருக்கும். அதில் சென்று 'Beneficiary status' என்பதை கிளிக் செய்து பார்க்கலாம். உங்களுடைய மொபைல் நம்பர், ஆதார் நம்பர் போன்ற விவரங்களை நீங்கள் வழங்க வேண்டியிருக்கும். இவ்வாறாக 10ஆவது தவணைப் பணம் குறித்த நிலவரத்தை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்