ஆப்நகரம்

விவசாயிகளுக்கு 2000 ரூபாய் கிடைக்காது... உடனே இதை அப்டேட் பண்ணுங்க!

பிஎம் கிசான் வெப்சைட்டில் இ-கேஒய்சி அப்டேட் செய்யாவிட்டால் 10ஆவது தவணைப் பணம் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது..!

Samayam Tamil 27 Dec 2021, 4:06 pm
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டுக்கு மூன்றுக்கு தவணைகளாக ரூ.6000 நிதியுதவி விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் 9 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் 10ஆவது தவணைப் பணம் 2022 ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil pm kisan


இந்நிலையில், 10ஆவது தவணைப் பணம் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டுமென்றால் முக்கியமான அப்டேட் ஒன்றைச் செய்ய வேண்டியிருக்கிறது. இதுகுறித்து பிஎம் கிசான் வெப்சைட்டிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தொடங்க இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே மிச்சம் உள்ளதால் விவசாயிகள் உடனடியாக தங்களது இ-கேய்சி விவரங்களை அப்டேட் செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் 10ஆவது தவணைப் பணம் ரூ.2,000 கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

விவசாயிகளுக்கு இனி 4000 ரூபாய்! ஜனவரியில் பணம் வருது?
10ஆவது தவணையில் விவசாயிகளுக்கு 4000 ரூபாய் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மத்திய அரசு அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், விவசாயிகள் தங்களது இ-கேஒய்சி விவரங்களை உடனடியாக அப்டேட் செய்யாவிட்டால் நிதியுதவியே கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.

பிஎம் கிசான் வெப்சைட்டில் சென்று Farmers Corner என்ற பிரிவில் e-kyc ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். ஆதார் நம்பர் கேப்ட்சா குறியீடு, மொபைல் நம்பர் போன்றவற்றைப் பதிவிட்டு, ஓடிபி சரிபார்ப்பையும் முடித்துவிட்டால் போதும்.

இ-கேய்சி விவரங்கள் அப்டேட் ஆகிவிட்டால் தவணைப் பணம் வருவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆன்லைன் மூலமாகவே இதை அப்டேட் செய்யலாம். அல்லது இ-சேவை மையத்தில் அப்டேட் செய்ய முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்