ஆப்நகரம்

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000... இதுவும் மோடி திட்டம்தான்!

பிஎம் கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் கிடைக்கும் நிலையில், இன்னொரு திட்டத்தில் 36,000 ரூபாய் கிடைக்கிறது.

Samayam Tamil 15 May 2021, 8:48 pm
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசிடமிருந்து நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. கொரோனா வந்த பிறகு மக்களிடையே நிதி நெருக்கடி நிலவுவதால் ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு விரைந்து பணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டு அதன்படி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil pm kisan


விவசாயிகளுக்கான இன்னொரு திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 பென்சன் கிடைக்கிறது. பிஎம் கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டம்தான் அது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிக்கு 60 வயது ஆகும்போது அவரது வங்கிக் கணக்கில் குறைந்தது ரூ.3,000 வந்து சேரும். இத்திட்டத்துக்கான வயது வரம்பு 18 முதல் 40 ஆகும். இத்திட்டத்தில் இணையும் விவசாயி தனது 60 வயது வரையில் மாதத்துக்கு ரூ.55 முதல் ரூ.200 பிரீமியம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் இணைவதற்கு maandhan.in என்ற முகவரியில் செல்லலாம். ஆதார் , வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றை வைத்து இணையலாம்.

ஆதார் அப்டேட்: எவ்வளவு கட்டணம் செலுத்தணும் தெரியுமா?
விவசாயிகள் இத்திட்டத்தில் இணையும் வயதைப் பொறுத்து பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கெனவே பிஎம் கிசான் திட்டத்தில் இணைந்து நிதியுதவி பெறுபவர்கள் மந்தன் திட்டத்தில் இணைவது சுலபமாக இருக்கும். எனவே விவசாயிகள் எவ்வளவு விரைவாக இத்திட்டத்தில் இணைகிறார்களோ அவ்வளவு அதிக பயன் கிடைக்கும். தாமதமாக இணைந்தால் அதிக பிரீமியம் செலுத்தவேண்டியிருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்