ஆப்நகரம்

அடுத்த பொருளாதாரச் சலுகை எப்போது? நிர்மலா பதில்!

விரைவில் இன்னொரு பொருளாதாரச் சலுகை அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 29 May 2021, 8:09 pm
சென்ற ஆண்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் மே 17 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட நிலையில், அதை மீட்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. அப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதாரச் சலுகையை அறிவித்தார். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை மையமாகக் கொண்டு பல்வேறு சிறப்பு அறிவிப்புகளும், வருமான வரி தொடர்பான அறிவிப்புகளும், டிடிஎஸ், பிஎஃப் தொடர்பான அறிவிப்புகளும் அதில் இடம்பெற்றிருந்தன.
Samayam Tamil nirmala


இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்புகள் இன்னும் தீவிரமாக இருப்பதால் மற்றுமொரு பொருளாதாரச் சலுகை அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதுகுறித்து முடிவு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பலர் வேலையை இழந்துள்ளனர். மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரச் சலுகை மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரூ.500: கள்ள நோட்டுப் புழக்கம் அதிகரிப்பு!
கொரோனா மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து வருவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் எனவும் நிர்மலா சீதாராமன் தற்போது தெரிவித்துள்ளார். மே 28ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்துப் பேசிய நிர்மலா, ”பிப்ரவரி மாதத்தில்தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது மே மாதம்தான் ஆகிறது. எனவே நிலவரங்களைக் கண்காணித்து பொருளாதாரச் சலுகை குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்