ஆப்நகரம்

நிர்மலா சீதாராமன் அறிவிப்பு... விவசாயிகளுக்கு என்ன பயன்?

விவசாயிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 14 May 2020, 4:39 pm
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விவசாயிகளுக்கான நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை குறித்து அவர் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
Samayam Tamil நிர்மலா சீதாராமன்


மூன்று கோடி குறு விவசாயிகள் ரூ.4 லட்சம் கோடிக்கு கடன் பெற்றுள்ளனர். ரிசர்வ் வங்கி மூலமாக கடன் பெற்ற இவ்விவசாயிகளுக்கு வட்டியை செலுத்த ஆரம்பத்தில் மூன்று மாத கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இக்கால அவகாசம் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வட்டி உதவி உள்ளிட்ட சலுகைகள் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூ.25,000 கோடி கடன் வரம்புடன் 25 லட்சம் கிசான் கிரெடிட் கார்டுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ஆம் தேதிக்கும் ஏப்ரல் 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ரூ.86,600 கோடி மதிப்புள்ள 63 லட்சம் விவசாயக் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் கூட்டுறவு வங்கிகளுக்கும், மண்டல ஊரக வங்கிகளுக்கும் நபார்டு மூலமாக ரூ.29,500 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஊரடக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4,200 கோடி மாநில அரசுகளுக்கு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திலிருந்து மாநில அரசு ஏஜென்சிகள் விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.6,700 கோடி மூலதனம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்