ஆப்நகரம்

பென்சன் பணம் கிடைக்காது.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பளீச்!

தேசிய பென்சன் திட்டத்தில் உள்ள நிதி மாநிலங்களுக்கு வழங்கப்படாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 20 Feb 2023, 6:02 pm
அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இந்த கோரிக்கையை முன்வைத்து அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil nirmala sitharaman
nirmala sitharaman


ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாசலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. ஏற்கெனவே தேசிய பென்சன் திட்டத்தின் (NPS) கீழ் மாநிலங்களின் தொகுப்பில் அரசு ஊழியர்களின் பென்சன் நிதி உள்ளது.

இந்த பென்சன் நிதி பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில், பென்சன் நிதியில் உள்ள பணத்தை திருப்பி தர வேண்டும் என மத்திய அரசுக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் உள்ள பென்சன் நிதி மாநிலங்களுக்கு திருப்பி தரப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவரிடம், தேசிய பென்சன் திட்ட நிதியில் உள்ள பணத்தை மாநிலங்களிடம் திருப்பி வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தபோது, “டெபாசிட் செய்யப்பட்ட பணம் மீண்டும் மாநிலங்களிடம் வழங்கப்பட வேண்டும் என மாநில அரசுகள் நினைத்தால் அது நடக்காது.

ஊழியர்களுக்கு அவர்களுக்கான பணம் கிடைக்கும். டெபாசிட் செய்யப்பட்ட பணத்துக்கு வட்டி கிடைக்கிறது. ஊழியர்கள் பணி ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்கான நிதி அவர்களிடமே சேர்க்கப்பட்டுவிடும். ஆனால், டெபாசிட் செய்யப்பட்ட பணம் மாநில அரசுகளுக்கு வராது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து நிதி துறை செயலாளர் விவேக் ஜோஷி, “பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் போக்கு நல்லதல்ல. இதனால் மாநில அரசுகள் தங்கள் சுமையை தள்ளிப்போடுகின்றன. சட்டப்படி, மாநில அரசுகளுக்கு பென்சன் நிதி செலுத்தப்படாது” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்