ஆப்நகரம்

பிடிஆர் செய்த தரமான சம்பவம்.. பட்ஜெட்டில் காத்திருக்கும் ட்ரீட்!

தமிழகத்தின் நிதிநிலை சிறப்பாக மேம்பட்டுள்ளது பட்ஜெட்டில் தெரியவரும் என நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Mar 2022, 1:41 pm
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது மாநிலத்தின் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நியமித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். வெளிநாடுகளில் மேலாண்மைக் கல்வி, சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் பதவிகள் வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இயல்பாகவே பொதுமக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன.
Samayam Tamil palanivel thiagarajan


நிதியமைச்சராக பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில் தனது கட்சிப் பதவியான ஐடி விங் செயலாளர் பொறுப்பையும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்தார். எனினும், தமிழகத்தின் நிதிநிலையை சீர்செய்ய அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதனால் கிடைத்த பலன்கள் பற்றி தமிழக பட்ஜெட்டில்தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழக பட்ஜெட் அ றிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில், தமிழகத்தின் நிதிநிலை மிகப்பெரிய அளவில் மேம்பட்டுள்ளதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அகவிலைப்படி நிலுவைத் தொகை ஒரே செட்டில்மெண்ட்.. இன்றே வெளியாகும் சூப்பர் அறிவிப்பு?
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவரிடம், மத்திய அரசிடம் இருந்து என்னென்ன உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள் என நெறியாளர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “தமிழகத்தை போன்ற பெரிய, வளமான மாநிலங்கள் நிறைய விஷயங்களை நாமாகவே செய்துகொள்ள முடியும். கடந்த ஆண்டு மே மாதம் நான் நிதியமைச்சராக பதவியேற்றேன். டிசம்பர் 30ஆம் தேதி வரை டெல்லி செல்வதற்கான தேவையே எனக்கு எழவில்லை.

டெல்லிக்கு சென்று எதையும் கேட்க வேண்டிய தேவை எனக்கு எழவில்லை. என் கட்டுப்பாட்டில் பல விஷயங்கள் இருந்தன. அதில் நான் கவனம் செலுத்தினேன். இன்னும் 10 நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, கற்பனை எல்லைகளை தாண்டி நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளது தெரியவரும்.

தமிழகத்தின் கடந்த 10 ஆண்டுகால நிலையை மட்டுமல்லாமல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளோம். டெல்லிக்கு செல்லாமலேயே இதையெல்லாம் செய்ய முடிந்தது. டெல்லி எங்களின் மீட்பராக இருக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

மத்திய அரசிடம் நாங்கள் எதிர்பார்ப்பது நியாயமான, சுயமாக முடிவுகளை எடுப்பதற்கான கூட்டணியைத்தான். இந்தியா என்பது பலதரப்பட்ட வேறுபாடுகளை கொண்ட மாநிலங்களின் ஒன்றியம். டெல்லியில் இருந்துகொண்டு 140 கோடி மக்கள் மீது ஒரே திட்டத்தை திணிக்க முடியும் என்பது சாத்தியமற்றது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்