ஆப்நகரம்

15 ஆண்டு பழைய வாகனங்களுக்குத் தடை

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கனரக வாகனங்களை தடைசெய்ய இருப்பதாக மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Mar 2018, 5:02 pm
15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கனரக வாகனங்களை தடைசெய்ய இருப்பதாக மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil finance ministry gives nod to scrap vehicles older than 15 years
15 ஆண்டு பழைய வாகனங்களுக்குத் தடை


தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த மத்திய கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, பழைய வானங்கள் சாலையில் இயக்கப்படுவதைத் தடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், வாங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பழைய கனரக வாகனங்களை தடைசெய்வது குறித்த பரிந்துரை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் இது பற்றி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

விபத்துக்களைத் தவிர்க்கவும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விதிமுறை அமலுக்கு வந்தால் வர்த்தக நிறுவனங்கள் பெரும் பிரச்னையைச் சந்திக்கும் என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்