ஆப்நகரம்

மார்ச் வரைக்கும் புதிய சலுகை எதுவும் கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்!

கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அடுத்த மார்ச் மாதம் வரையில் புதிய நலத் திட்டங்கள் எதையும் செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 5 Jun 2020, 1:25 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அனைத்துத் துறைகளிலும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாமல் மத்திய அரசும் மாநில அரசுகளும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, கொரோனா நிவாரணத்துக்கும் கொரோனா தொற்று சிகிச்சைக்கும் மத்திய அரசு அதிகளவில் செலவிட்டு வருகிறது. அதோடு, பொதுமக்களுக்கு ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்தது. ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுய சார்பு இந்தியா திட்டத்தையும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
Samayam Tamil new schemes


இதுபோன்ற சூழலில் கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவிகள் தாண்டி மக்களுக்கு வேறு சிறப்புத் திட்டங்களை அறிவிக்க முடியாத சூழலில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பிரதமரின் கரீப் கல்யான் யோஜனா மற்றும் சுயசார்பு இந்தியா ஆகிய இரண்டு திட்டங்களைத் தவிர புதிய திட்டங்கள் எதுவும் 2021 மார்ச் மாதம் வரையில் அறிவிக்கப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தொழில் நடவடிக்கைகள் முடங்கியதாலும் மக்களும் நிதி நெருக்கடி ஏற்பட்டதாலும் அரசுக்கு வரி வருவாய் முற்றிலும் நின்று போனதால் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

பங்குச் சந்தை நிலவரம்... பணமழையில் ரிலையன்ஸ்!

இதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களுக்கான நிதியுதியும் அடுத்த 9 மாதங்களுக்கு வழங்கப்பட மாட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவுகள் துறையின் அறிவுறுத்தலின்பேரில் இந்த முடிவை மத்திய மோடி அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளை மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் முறைகேடுகள் இல்லாமல் பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒன்பது மாதங்களுக்கு நாட்டு மக்களுக்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்