ஆப்நகரம்

Flipkart Big Saving days: பட்ஜெட் மொபைல் முதல் iPhone வரை.. பிளிப்கார்ட் அதிரடி தள்ளுபடி விற்பனை!

மே 5ஆம் தேதி முதல் பல்வேறு தள்ளுபடி சலுகைகளுடன் தொடங்குகிறது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 30 Apr 2023, 10:47 am
பிளிப்கார்ட் நிறுவனம் பிக் சேவிங் டேஸ் (Flipkart Big Saving Days) சிறப்பு விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் மே 5ஆம் தேதி பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை தொடங்க இருக்கிறது.
Samayam Tamil flipkart big saving days
flipkart big saving days


இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் பல்வேறு மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தள்ளுபடி கிடைக்க இருக்கிறது. குறிப்பாக Apple iPhone 13, Samsung Galaxy F14 5G, Realme C55, Pixel 6a மற்றும் பல்வேறு மொபைல் போன்களுக்கு இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி கிடைக்க இருக்கிறது.

குறிப்பாக Pixel 6a மொபைல் போன் 25,999 ரூபாய் என்ற தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மறுபுறம் Realme GT Neo மொபைல் போன் 19,999 ரூபாய் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Poco X5 Pro மொபைல் 20,999 ரூபாய்க்கு தள்ளுபடியில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Realme 10 Pro+5G மொபைல் 22,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

பட்ஜெட் மொபைல் வாங்குவோருக்கு Realme C55 மொபைல் 7,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஐபோன் பிரியர்களுக்கு iPhone 13 மொபைல் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆனால் என்ன விலைக்கு விற்பனையாகும் என்பது பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை. தற்போது இந்த ஐபோன் 13 பிளிப்கார்ட்டில் 61,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்னும் அதிரடியான சலுகைகள் குறித்த விவரங்கள் மே 1ஆம் தேதி வெளியிடப்படும் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக வழங்கப்படும் தள்ளுபடி மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டு சலுகைகள், EMI வசதி போன்ற பலன்களும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்