ஆப்நகரம்

ஸ்விக்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணம்.. எல்லா ஆர்டர்களுக்கும் கட்டாயம்!

Swiggy platform fee: வாடிக்கையாளர்களிடம் உணவு ஆர்டர்களுக்கு புதிய கட்டணத்தை வசூலிக்கும் ஸ்விக்கி நிறுவனம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 28 Apr 2023, 6:21 pm
ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் பிளாட்பார்ம் கட்டணம் (Platform fee) என்ற புதிய கட்டணத்தை வசூலிக்க தொடங்கியுள்ளது.
Samayam Tamil swiggy
swiggy


உணவு டெலிவரி ஆப்கள் ஏற்கெனவே மிக அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும், மெனுவில் உள்ளதை விட அதிக விலை விதிக்கப்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் குறை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தனது வாடிக்கையாளர்களிடம் புதிதாக பிளாட்பார்ம் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்களிடம் ஒவ்வொரு ஆர்டருக்கும் 2 ரூபாயை பிளாட்பார்ம் கட்டணமாக வசூலிக்க தொடங்கியுள்ளது ஸ்விக்கி நிறுவனம். முதற்கட்டமாக பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் மற்ற நகரங்களிலும் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒரு ஆர்டரில் எத்தனை உணவுகள் இருந்தாலும், ஆர்டரின் மதிப்பு எவ்வளவு ரூபாயாக இருந்தாலும் ஒரு ஆர்டருக்கு 2 ரூபாய் மட்டும் பிளாட்பார்ம் கட்டணமாக வசூலிக்கப்படும். 2 ரூபாய் என்பது கேட்பதற்கு மிக சிறிய தொகையாக இருக்கலாம். ஆனால், ஸ்விக்கி ஆப்-இல் தினமும் 15 லட்சத்துக்கு மேற்பட்ட ஆர்டர்கள் வருகின்றன. இதனால் ஸ்விக்கி நிறுவனம் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும்.

கடந்த சில மாதங்களாக உணவு டெலிவரி தொழில் மந்தமாகி வருகிறது. வட்டி விகிதம் உயர்வு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்களும் முதலீட்டை குறைத்துள்ளனர். இதனால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்கள் செலவுகளை குறைக்கவும், கூடுதல் வருவாய் ஈட்டவும் மாற்று வழிகளை கண்டறிந்து வருகின்றன.

இந்த வகையில் ஸ்விக்கி நிறுவனம் புதிதாக 2 ரூபாய் பிளாட்பார்ம் கட்டணத்தை வசூலித்து வருகிறது. ஸ்விக்கி நிறுவனத்தின் பிரதான போட்டியாளரான சொமேட்டோ (Zomato) இதுவரை கூடுதல் கட்டணம் ஏதும் அறிவிக்கவோ, வசூலிக்கவோ இல்லை.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்