ஆப்நகரம்

Stock Market: ஒரு வழியாக எண்ட்ரி கொடுத்த FPI முதலீட்டாளர்கள்.. இனி நல்ல டைமா?

கடந்த வாரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய மார்க்கெட்டில் 7600 கோடி ரூபாய் முதலீடு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 19 Feb 2023, 11:41 am
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investors) தொடர்ந்து வெளியேறி வந்தனர். இதனால் இந்திய பங்குச் சந்தைகளும் மேலுமில்லாமல், கீழுமில்லாமல் ஏற்ற இறக்கத்துடனேயே இருந்தது.
Samayam Tamil BSE
BSE


இந்நிலையில், கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 7600 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இதனால், வரும் நாட்களிலும் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் காணும் என முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை பிறந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சீனா, ஹாங் காங், தென் கொரியா பங்குச் சந்தைகளில் பங்குகள் மலிவு விலையில் இருந்தன. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து பணத்தை வெளியே எடுத்துவிட்டு, சீனா, ஹாங் காங் மற்றும் கொரிய சந்தைகளில் முதலீடு செய்தனர்.

இதன் விளைவாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் நிலை இல்லாமல் காணப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரத்தில் (பிப்ரவரி 13-17) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் நிகர முதலீடாக 7600 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.

அதற்கு முந்தைய வாரத்தில் (பிப்ரவரி 7-12) இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 3920 கோடி ரூபாயை வெளியே எடுத்தடு குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளால் இந்திய பங்குச் சந்தை கடுமையாக சரிந்தது. தற்போது அதானி அதிர்ச்சியில் இருந்து பங்குச் சந்தை சற்று மீண்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

இதனால், வரும் நாட்களிலும் பங்குச் சந்தை ஏற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த வெளிநாட்டு முதலீடுகள் வரும் வாரத்தில் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்