ஆப்நகரம்

சேமிப்பையே மறந்துட்டாங்க.. மக்களுக்கு ப.சிதம்பரம் கொடுக்கும் பைனான்ஸ் அட்வைஸ்!

சேமிப்புகளுக்கான முக்கியத்துவம் தூக்கி வீசப்பட்டுள்ளதாக பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 2 Feb 2023, 12:08 pm
நேற்று மத்திய பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், புதிய வருமான வரி முறையில் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வருமான வரி விகிதங்களும் திருத்தப்பட்டுள்ளது. பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் இல்லை.
Samayam Tamil p chidambaram
p chidambaram


இந்நிலையில், புதிய வருமான வரி முறை, தனிநபர் சேமிப்புகள் குறித்து முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில், “புதிய வரி முறையின் புதிர் தெளிவாகி வருகிறது.

சில ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன். தி இந்து ஊடகத்தின்படி, 35 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு பழைய வரி முறை பயனுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்தின்படி, 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு எந்த வித்தியாசமும் இல்லை.

New Income Tax Vs Old Tax: பழைய வருமான வரிக்கும் புதிய வருமான வரிக்கும் என்ன வித்தியாசம்? எது சிறந்தது?
எகனாமிக் டைம்ஸ் ஊடகத்தின்படி, 60 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு பழைய வரி முறை பயனுள்ளது. ஒரு வரி செலுத்தும் நபராக எந்த அவசர முடிவையும் எடுக்க வேண்டாம். கணக்கு போட்டு, ஆடிட்டரிடம் ஆலோசனை கேட்கவும்.

பழைய வரி முறைக்கும், புதிய வரி முறைக்கும் இடையேயான இரைச்சலில், வளர்ந்து வரும் நாட்டில் தனிநபர் சேமிப்பின் முக்கியத்துவம் தூக்கி எறியப்பட்டுள்ளது. அரசால் பாதுகாப்பு வழங்கப்படாத சூழலில், பெருவாரியான மக்களுக்கு தனிநபர் சேமிப்புகளே ஒரே சமூக பாதுகாப்பு” என்று தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் சேமிப்புகள் ஊக்குவிக்கப்படாமல், செலவுகள் ஊக்குவிக்கப்படுவதாக ஏற்கெனவே பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில், பட்ஜெட்டில் மக்களிடையே சேமிப்புகள் ஊக்குவிக்கப்படவில்லை என்பதையே ப.சிதம்பரமும் எதிரொலிக்கிறார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்