ஆப்நகரம்

200 மில்லியன் டாலர் செலவில் பிரம்மாண்ட ஆலை.. தென்னிந்தியாவில் கடையை போடும் ஆப்பிள்!

சுமார் 200 மில்லியன் டாலர் செலவில் தெலங்கானாவில் ஏர்பாட்ஸ் ஆலை அமைக்க ஃபாக்ஸ்கான் திட்டம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 16 Mar 2023, 10:53 am
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தெலங்கானாவில் 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் (Airpods) உற்பத்தி ஆலையை அமைக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil foxconn
foxconn


ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்ளிட்ட தயாரிப்புகளை தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகாட்ரான் ஆகிய மூன்று நிறுவனங்களும் உற்பத்தி செய்து வருகின்றன. இதில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மட்டுமே 70% ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் ஆகிய நிறுவனங்களின் பெரிய ஆலைகள் சென்னை அருகே இயங்கி வருகின்றன. இதுபோக விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆலை பெங்களூரு அருகே இயங்கி வருகிறது.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து ஏர்பாட்ஸ் (Airpods) உற்பத்தி செய்வதற்கான ஆர்டரை ஃபாக்ஸ்கான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீனாவுக்கு பதிலாக இந்தியாவில் ஆலை அமைக்கவும் ஆப்பிள் முடிவு செய்துள்ளதாம்.

இதன்படி, தெலங்கானா மாநிலத்தில் 200 மில்லியன் டாலர் முதலீட்டில் மிகப்பெரிய ஏர்பாட்ஸ் ஆலையை அமைப்பதற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலையில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் wireless earphones உற்பத்தி செய்யப்படும்.

ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து ஃபாக்ஸ்கான் கைப்பற்றிய ஆர்டரின் மதிப்பு தெளிவாக தெரியவில்லை. எனினும், 200 மில்லியன் டாலர் செலவில் ஆலை அமைக்க ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே சென்னை அருகே இரண்டு மிகப்பெரிய ஆப்பிள் ஆலைகள், பெங்களூருவில் ஒரு ஆலை அமைந்துள்ளது. இதுபோக தமிழ்நாட்டில் ஓசூரிலும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆப்பிள் பொருட்களை தயாரிக்க இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரானிக்ஸ் ஆலை அமைத்துள்ளது.

இத்துடன் சேர்த்து தற்போது தெலங்கானாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 200 மில்லியன் டாலர் செலவில் ஏர்பாட்ஸ் ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், தென்னிந்தியா ஆப்பிள் பொருட்களை உற்பத்தி செய்யும் மையமாக உருவாகி வருகிறது. இதில் சென்னை முக்கிய பங்கு வகிக்கிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்