ஆப்நகரம்

இந்திய சந்தைகளில் அந்நிய முதலீடு அதிகரிப்பு

இந்திய கடன்பத்திர மற்றும் பங்குச்சந்தைகளில் கடந்த வாரம் ரூ.9,500 கோடி அந்நிய முதலீடு நடைபெற்றதாக, தெரியவந்துள்ளது.

TNN 25 Sep 2016, 7:28 pm
இந்திய கடன்பத்திர மற்றும் பங்குச்சந்தைகளில் கடந்த வாரம் ரூ.9,500 கோடி அந்நிய முதலீடு நடைபெற்றதாக, தெரியவந்துள்ளது.
Samayam Tamil fpis remain bullish on markets pour in rs 9500 crore in sep
இந்திய சந்தைகளில் அந்நிய முதலீடு அதிகரிப்பு


இதுதொடர்பாக, பங்குச்சந்தைகள் பரிவர்த்தனை வாரியமான செபி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு எடுத்து வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அந்நிய முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜிஎஸ்டி மசோதாவை செயல்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளை மத்திய நிதியமைச்சகம் மேற்கொண்டுள்ளதால், சர்வதேச தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடையே இந்திய பொருளாதாரம் மீது அதிக நம்பிக்கை நிலவுகிறது.

இதனால், கடன்பத்திர சந்தை மற்றும் பங்குச்சந்தைகளில் அவர்கள் முதலீடை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். கடந்த வார வர்த்தகத்தில் மட்டும் பங்குச்சந்தைகளில் ரூ.5,643 கோடியையும், கடன்பத்திர சந்தையில் ரூ.3,905 கோடி ரூபாயையும் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளதாக, செபி குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 2016ம் ஆண்டின் இதுவரையான காலத்தில் பங்குச்சந்தைகளில் நடைபெற்ற அந்நிய முதலீட்டின் மதிப்பு ரூ.46,493 கோடியாகவும், கடன்பத்திர சந்தையில் இதுவே ரூ.43,051 கோடியாகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary:
Foreign investors have pumped Rs 9,500 crore (USD 1.4 billion) into the country's capital markets so far this month, driven by sound progress on rollout of GST and contraction in current account deficit (CAD).

அடுத்த செய்தி

டிரெண்டிங்