ஆப்நகரம்

ஊரடங்கில் வாடும் மக்கள்... உணவு தானியங்கள் விநியோகம்!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ மே, ஜூன் மாதங்களில் உணவு தானியங்களைக் கூடுதலாக வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

Samayam Tamil 5 May 2021, 1:14 pm
சென்ற ஆண்டின் மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கால் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த மக்களுக்குப் பொருளாதார ரீதியாக ஆதரவு வழங்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு ரேஷன் கார்டு வைத்துள்ள 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை அமல்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் போதிய உணவு தானியங்களை இந்திய உணவு கார்பரேஷன் வழங்கியது. பொதுமக்களும் இத்திட்டத்தால் வெகுவாகப் பயன்பெற்றனர்.
Samayam Tamil food


இந்நிலையில், தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில், நாட்டு மக்களின் நலனில் கருத்தில் கொண்டு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் மீண்டும் உணவு தானியங்களை அதிகமாக விநியோகிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, கரீப் கல்யாண் திட்டத்தை மே மற்றும் ஜூன் மாதங்களில் அமல்படுத்தும் பணியை உணவு மற்றும் பொது விநியோகத் துறை தொடங்கியுள்ளது. இதன்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் விநியோகித்து வருகிறது.

SBI வாடிக்கையாளர்களுக்கு மே 31 வரை அவகாசம்!!
இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளிலிருந்து 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மே 3ஆம் தேதி வரை கூடுதலாக 5.88 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகியவை மே மாதத்திற்கான 100 சதவீத ஒதுக்கீட்டையும் பெற்றுள்ளன. மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்காக ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 80 கோடிப் பேர் பயனடைவார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்