ஆப்நகரம்

இலவச பரிசு வாங்கிட்டிங்களா? பிரச்சினைல சிக்கிடாதிங்க.. முக்கிய அலர்ட்!

இலவச பரிசுகள் வழங்குவதாக சொல்லி மோசடி. வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை

Samayam Tamil 18 Jun 2021, 8:25 pm

ஹைலைட்ஸ்:

  • பல பரிசுகள் தருவதாக சொல்லி மோசடி கும்பல்கள் அட்ராசிட்டி
  • வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அலர்ட்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil SBI
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் வாடிக்கையாளர்களின் சவுகரியம் கருதி பல்வேறு திட்டங்களை எஸ்பிஐ அறிமுகப்படுத்தி வருகிறது.
இதுபோக, மோசடி கும்பல்களிடம் பாதுகாப்பாக இருக்க அறிவுரைகளையும், வழிகாட்டல்களையும் எஸ்பிஐ வங்கி வழங்கி வருகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இலவச பரிசுகள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி சில கும்பல்கள் மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வந்துள்ளது.

இல்லாத ஒரு வங்கியின் பெயரைச் சொல்லி, அந்த வங்கியில் இருந்து இலவச பரிசுகள் கிடைப்பதாக பொய் சொல்லி, வாடிக்கையாளர்களின் சொந்த தகவல்களை திருடி அதன் மூலம் பணமோசடியில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன? இதில் என்ன ஸ்பெஷல்?
இதுபோல பரிசுகள் வழங்குவதாக சொல்லி வலைவிரிக்கும் மோசடி கும்பல்களிடம் ஏமாற வேண்டாம் எனவும், மெசேஜ் அல்லது இமெயில் மூலம் வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்