ஆப்நகரம்

தங்கம் விலை இந்த வாரம் உயருமா? நீங்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

வரும் வாரத்தில் தங்கம் விலை ஏறுமா இறங்குமா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.

Samayam Tamil 7 Aug 2022, 10:18 am
கடந்த சில தினங்களாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் ஏறி இறங்கி வருகிறது. கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு மாத உச்சத்தை தொட்டது. இதற்கு காரணம் சீனா - தைவான் இடையேயான பதற்ற நிலைதான். வரும் வாரத்தில் தங்கம் விலை எப்படி நகரும் என்பதை தீர்மானிக்கப்போகும் முக்கிய விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
Samayam Tamil gold


தங்கம் விலை எதற்கெல்லாம் உயரும்?

போர் சூழல், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம், மோசமான பொருளாதார சூழல், பணவீக்கம் என எல்லா நெருக்கடி காலங்களிலும் தங்கம் விலை உயரும்.

அமெரிக்காவில் பணவீக்கம்

ஜூன் மாதம் அமெரிக்காவில் சில்லறை பணவீக்கம் 9.1% ஆக உயர்ந்து 41 ஆண்டு உச்சத்தை தொட்டது. இந்நிலையில், வரும் வாரத்தில் ஜூலை மாத பணவீக்க விவரங்களை அமெரிக்கா வெளியிடும். பணவீக்கம் உயர்ந்திருந்தால் தங்கம் விலையும் உயரும்.

டாலர் மதிப்பு

தற்போது அமெரிக்க டாலர் வலுவாக இல்லாத நிலையில், வரும் நாட்களில் டாலர் இண்டக்ஸ் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து தங்கம் விலை உயரும். டாலர் மதிப்பு மேலும் குறைந்தால் தங்கம் விலை உயரும்.

ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. ஏன் இவ்வளவு வேகம்? காரணம் இதுதான்!
ஃபெடரல் வங்கி உரை

அமெரிக்க ஃபெடரல் வங்கியை சேர்ந்த இரண்டு முக்கிய அதிகாரிகள் வரும் வாரத்தில் உரையாற்ற இருக்கின்றனர். அடுத்தடுத்த மாதங்களில் ஃபெடரல் வங்கி எந்த விதமான பணக் கொள்கை முடிவுகளை எடுக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்புகள் இதனால் உருவாகும். இது தங்கம் விலையை பாதிக்கும்.

சீனா - தைவான் பதற்றம்

ஏற்கெனவே ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியபோது தங்கம் விலை உயர்ந்தது. தற்போது சீனா - தைவான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இந்த பதற்றம் மேலும் அதிகரித்தால் தங்கம் விலையும் அதிகரிக்கும்.

தொழில்துறை நிலவரம்

ஐரோப்பா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கான தொழில்துறை விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இதனால் தங்கம் விலை ஏற்ற இறக்கம் பாதிக்கப்படலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்