ஆப்நகரம்

பசு மாட்டுக்கு செஸ் வரி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் வரை.. இ.பி பட்ஜெட் ஹைலைட்ஸ்!

இமாசலப் பிரதேச மாநில பட்ஜெட்டில் பசு மட்டுக்கான செஸ் வரி 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 17 Mar 2023, 3:27 pm
இமாசலப் பிரதேசம் மாநில சட்டமன்றத்தில் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் இன்று 2023-24ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பசுக்கு செஸ் வரி முதல் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil cow cess
cow cess


பட்ஜெட் உரையில், மதுபானங்களுக்கு ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் பசு செஸ் வரி (Cow cess) விதிக்கப்படும் என இமாசலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் அறிவித்துள்ளார். இதன்மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மதுபானங்களுக்கு ஒரு பாட்டிலுக்கு 2 ரூபாய் பசு செஸ் வரியை இமாசலப் பிரதேச அரசு வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பசு செஸ் வரி வாயிலாக கிடைக்கும் வருவாய் பசுக்களுக்கு சரணாலயம் அமைக்கவும், அவற்றை பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், பசு செஸ் வரி 2 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோக பசுமை மின்சக்தி திட்டத்தின் படி, 2023-24ஆம் நிதியாண்டில் 500 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின்சக்தி திட்டங்களை அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இமாசலப் பிரதேசத்தில் சுற்றுலா துறை அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. எனவே, கங்க்ரா மாவட்டம் சுற்றுலா தலைநகரமாக வளர்த்தெடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இமாசலப் பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தியுள்ளதாகவும் பட்ஜெட் உரையில் முதல்வர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். இதனால் 1.36 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்