ஆப்நகரம்

Income Tax Rules: வருமான வரி விதிமுறைகள் மாற்றம்.. ஜூலை முதல் புதிய ரூல்ஸ்!

ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் வருமான வரி சார்ந்த புதிய விதிமுறைகள்.

Samayam Tamil 30 Jun 2022, 2:39 pm
வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் வருமான வரி சார்ந்த சில விதிமுறைகள் மாற்றப்பட்டு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. புதிய ரூல்ஸ் பற்றி விரிவாக பார்க்கலாம்.
Samayam Tamil from cryptocurrency to doctors and social media influencers income tax changes from july 1st 2022
Income Tax Rules: வருமான வரி விதிமுறைகள் மாற்றம்.. ஜூலை முதல் புதிய ரூல்ஸ்!


​கிரிப்டோகரன்சி வரி

ஜூலை 1ஆம் தேதி முதல் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு 1% TDS பிடித்துக்கொள்ளப்படும். கிரிப்டோகரன்சி மட்டுமல்லாமல் NFT போன்ற டிஜிட்டல் சொத்துகள் பரிவர்த்தனைக்கும் 1% TDS வசூலிக்கப்படும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையால் லாபம் கிடைத்தாலும், நஷ்டம் அடைந்தாலும் 1% TDS நிச்சயமாக பிடித்துக்கொள்ளப்படும்.

​பான் - ஆதார் இணைப்பு

ஆதார் பான் இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூன் 30 வரை 500 ரூபாய் அபராதம் செலுத்தி ஆதார் - பான் கார்டுகளை இணைத்துக்கொள்ளலாம். ஜூலை 1ஆம் தேதி முதல் 1000 ரூபாய் அபராதம் செலுத்தி ஆதார் - பான் இணைக்க வேண்டும்.

​மருத்துவர்கள், சமூக ஊடக பிரபலங்களுக்கு

மருத்துவர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் (Social media influencers) விளம்பரங்கள் வாயிலாக பெறும் தொகைக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் 10% TDS பிடித்துக்கொள்ளப்படும். ஒரு நிதியாண்டுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் விளம்பரங்கள் வாயிலாக வருமானம் ஈட்டினால் மட்டுமே TDS வசூலிக்கப்படும். 20,000 ரூபாய்க்குள் வருமானம் இருந்தால் TDS கிடையாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்