ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன் முதல் குடும்ப ஓய்வூதியம் வரை.. தமிழ்நாடு பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்புகள்!

அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன் முதல் குடும்ப ஓய்வூதியம் வரை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்புகள்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 20 Mar 2023, 12:21 pm
2023-24ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் (PTR Palanivel Thiagarajan) இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
Samayam Tamil from home loan advance to family pension finance minister ptr palanivel thiagarajan announcements in tamil nadu budget 2023
அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன் முதல் குடும்ப ஓய்வூதியம் வரை.. தமிழ்நாடு பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்புகள்!


பட்ஜெட்டில் மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கும் சூப்பரான அறிவிப்புகளை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

​அரசு ஊழியர்களுக்கு குடியிருப்பு​

பட்ஜெட் உரையில் அரசு பணியாளர்கள் நலன் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, “அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பாதுகாப்பில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. பழைய அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாக கட்டப்படும். வரும் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும்”

​வீட்டுக் கடன் முன்பணம்​

“உயர்ந்து வரும் கட்டுமான செலவுகளை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீட்டுக் கடன் முன்பணம் (Home Loan Advance) 40 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்”

​குடும்ப ஓய்வூதியம்​

“ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்று காலத்துக்கு பின் இந்த நிதி உதவிக்கான கோரிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஓய்வூதியர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு 2021-22ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் சிறப்பு நிதியாக அரசு வழங்கியுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை தீர்வு செய்ய மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படுகிறது”

​கருணைத் தொகை​

“கொரோனா பெருந்தொற்றின்போது இறந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் கருணைத் தொகை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்