ஆப்நகரம்

ஏப்ரல் 1 முதல் எல்லாம் மாறப்போகுது - அமலாகும் புதிய விதிமுறைகள்!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் இவைதான்.

Samayam Tamil 29 Mar 2022, 5:14 am
ஒவ்வொரு மாதமும் புதுப்புது விதிமுறைகள், விலை உயர்வு உள்ளிட்டவை அமலுக்கு வரும். அதிலும் புதிய நிதியாண்டு தொடக்கம் என்றால் ஏராளமான புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும். அவ்வகையில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. எனவே, ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளை பற்றி பார்க்கலாம்.
Samayam Tamil from lpg cylinder price to cryptocurrency tax these rules are going to change from april 2022
ஏப்ரல் 1 முதல் எல்லாம் மாறப்போகுது - அமலாகும் புதிய விதிமுறைகள்!


​சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது வழக்கம். இம்மாதம் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​போஸ்ட் ஆபீஸ் வட்டி

சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலக மாத வருமானத் திட்டம், தபால் அலுவலக டெபாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்தவர்களுக்கு இனி வட்டித் தொகை ரொக்கமாக செலுத்தப்படாது. இதற்காக மேற்கூறியவற்றில் முதலீடு செய்தவர்கள் தங்கள் கணக்கை வங்கிக் கணக்கு அல்லது தபால் அலுவலக சேமிப்புக் கணக்குடன் இணைக்க வேண்டும். இவ்வகையில் நேரடியாக வங்கிக் கணக்குக்கு வட்டி தொகை வந்துவிடும்.

​ஆதார் - பான் இணைப்பு

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கும் ஆதார் - பான் கார்டுகளை இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

PF அக்கவுண்ட்

ஏப்ரல் 1ஆம் தேதி முதல், PF கணக்கில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு இருந்தால், வட்டித் தொகைக்கு வரி வசூலிக்கப்படும்.

​கிரிப்டோகரன்சிக்கு வரி

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30% வரி விதிக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த 30% வரி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்