ஆப்நகரம்

CEO: ஹீரோ டூ ரிலையன்ஸ்.. இந்தியாவிலேயே அதிக சம்பளம் யாருக்கு?

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 சிஇஓக்கள்.

Samayam Tamil 27 May 2022, 2:34 pm
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சலீல் பரேக்கிற்கு 88% சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது சலீல் பரேக்கின் ஆண்டு சம்பளம் 79 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மிக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகிகளின் (CEO) பட்டியலை பார்க்கலாம்.
Samayam Tamil from pawan munjal to mukesh ambani top ceos with highest salaries in india
CEO: ஹீரோ டூ ரிலையன்ஸ்.. இந்தியாவிலேயே அதிக சம்பளம் யாருக்கு?


​சலீல் பரேக்

இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாகி சலீல் பரேக்கிற்கு (Salil Parekh) தற்போது 88% சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதையடுத்து அவருக்கு ஆண்டுக்கு 79 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும்.

​பவன் முஞ்சல்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பவன் முஞ்சல் (Pawan Munjal) 2020ஆம் நிதியாண்டில் 84.59 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

​சந்திரசேகரன்

தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் (N Chandrasekaran) டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ளார். இவருக்கு ஆண்டுக்கு 65.5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

​ராஜீவ் பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ராஜீவ் பஜாஜுக்கு (Rajiv Bajaj) ஆண்டுக்கு 39.86 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கிறது.

​சுனில் மிட்டல்

ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுனில் மிட்டலுக்கு (Sunil Mittal) ஆண்டுக்கு 30.1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

​சிபி.குர்னானி

டெக் மஹிந்த்ரா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சிபி.குர்னானிக்கு (CP Gurnani) ஆண்டுக்கு 28.57 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கிறது.

​எஸ்.என்.சுப்ரமணியன்

எல்&டி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எஸ்.என்.சுப்ரமணியனுக்கு (SN Subrahmanyan) ஆண்டுக்கு 27.17 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

​ராஜேஷ் கோபிநாதன்

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராஜேஷ் கோபிநாதனுக்கு (Rajesh Gopinathan) ஆண்டுக்கு 25.7 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

​சித்தார்த்தா லால்

எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சித்தாரா லாலுக்கு (Sidhartha Lal) ஆண்டுக்கு 19.1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

​முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்