ஆப்நகரம்

Small Saving Schemes: சிறு சேமிப்பு திட்டங்களில் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

மத்திய அரசின் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

Samayam Tamil 3 Jul 2022, 9:20 am
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு மாற்றி அறிவிக்கிறது. ஆனால், கடந்த எட்டு காலாண்டுகளாக சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமலேயே இருந்தது.
Samayam Tamil small saving schemes


இந்நிலையில், இந்திய அரசு பத்திரங்களின் லாபம் உயர்ந்ததாலும், பணவீக்கம் போன்ற காரணங்களாலும் ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கும் சிறு, சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இந்நிலையில், தற்போது சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

Indian Bank Interest Rate: வட்டியை உயர்த்திய இந்தியன் வங்கி.. வாடிக்கையாளர்கள் ஷாக்!
  • பொது வருங்கால வைப்பு நிதி (PPF) - 7.1%

  • தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) - 6.8%

  • செல்வமகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Scheme) - 7.6%

  • கிசான் விகாஸ் பத்திரம் (KVP) : 6.9%

  • சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (SCSS) : 7.4%

  • சேமிப்பு கணக்கு (Savings Account) : 4%

  • 1 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் (FD) : 5.5%

  • 2 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் : 5.5%

  • 3 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் : 5.5%

  • 5 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் : 6.7%

  • 5 ஆண்டு ரெகரிங் டெபாசிட் (RD) : 5.8%

  • மாத வருமானத் திட்டம் (MIS) : 6.6%

அடுத்த செய்தி

டிரெண்டிங்