ஆப்நகரம்

சம்பளம் குறைவு.. வாரத்துக்கு 4 நாள் வேலை.. என்ன சொல்கின்றன புதிய தொழிலாளர் சட்டங்கள்?

புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தால் என்னென்ன மாற்றங்கள் வரும்?

Samayam Tamil 22 Apr 2022, 5:11 pm
நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டுவருவதற்கு மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சம்பளம், சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவு, பணிச்சூழல், பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பான நான்கு தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு தயார் செய்துள்ளது.
Samayam Tamil office


இந்நிலையில், ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இச்சட்டங்களுக்கு எதிர்ப்புகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை சுமார் 23 மாநிலங்கள் இதற்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளன.

தொழிலாளர் துறை ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால் மாநிலங்களின் ஒப்புதலும் தொழிலாளர் சட்டங்களுக்கு தேவை. எனவே சுமார் 23 மாநிலங்கள் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளன. சரி, இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தால் என்னென்ன மாற்றங்கள் வரும்?

Bank Holidays: மே மாதம் இந்த நாட்களில் பேங்க் லீவு!
புதிய தொழிலாளர் சட்டங்களால் ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளம் (Take Home Salary) குறையும். ஆனால் PF, Gratuity தொகை போன்றவை உயரும். புதிய சட்டத்தின்படி, ஊழியர்களுக்கான மாதாந்திர CTCயில் குறைந்தபட்சம் 50% அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும். மாத மொத்த சம்பளத்தில் 50%க்கு மேற்பட்ட தொகையை படித் தொகையாக பெற முடியாது.

இதனால் தானாகவே PF பங்களிப்பும், Gratuity தொகையும் உயரும். மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், தினசரி பணி நேரம் மாற்றப்படுகிறது. அதாவது, தற்போது ஒரு நாளைக்கு பணி நேரம் 8 மணி நேரமாக உள்ளது. புதிய சட்டத்தில் 12 மணி நேரமாக மாற்றப்பட இருக்கிறது.

12 மணி நேரமாக மாறும்போது வாரத்துக்கு வேலை நாட்களின் எண்ணிக்கையும் குறைகிறது. அதாவது, வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை. ஆக வாரத்துக்கு மொத்தம் 48 மணி நேரம் வேலை என்பது கட்டாயம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்