ஆப்நகரம்

பெட்ரோல் விற்பனை மந்தம்.. காரணம் என்ன?

இந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு வீழ்ச்சி அடைந்துள்ளது.

Samayam Tamil 16 Aug 2022, 5:27 pm
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருட்கள் மக்களிடையே அன்றாட வாழ்வில் அதிக பயன்பாட்டைக் கொண்டுள்ளன. இவற்றின் விலை ஏறினாலும் இவற்றுக்கான தேவை குறையாது. குறிப்பாக, பெட்ரோல் - டீசல் விலையேற்றம் பொதுமக்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தாலும் இவை தவிர்க்க முடியாத விஷயங்களாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் எரிபொருள் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
Samayam Tamil fuel


இந்நிலையில், சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது. வேளாண்மை மற்றும் தொழில் துறைகளில் டீசலுக்கான தேவை மந்தமாகியுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் 15ஆம் தேதி வரையிலான காலத்தில் இந்தியாவின் பெட்ரோல் விற்பனை ஜூலை மாதத்தில் 11.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2.82 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. ஜூலை மாதத்தின் இதே காலத்தில் பெட்ரோல் விற்பனை 3.17 மில்லியன் டன்னாக இருந்தது.

பெட்ரோல் விற்பனை ஜோர்.. விலை உயர்ந்தாலும் பிரச்சினை இல்லை!
டீசல் விற்பனையைப் பொறுத்தவரையில், 58.2 சதவீத உயர்வுடன் 1.78 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. அதேபோல, 2019 ஆகஸ்ட் மாதத்தை விட இது 23 சதவீதம் அதிகமாகும். விமான எரிபொருளைப் பொறுத்தவரையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் விமான எரிபொருள் விற்பனை 42.2 சதவீதம் உயர்ந்து 2,48,100 டன்னாக இருந்துள்ளது. இது 2021 ஆகஸ்ட் மாத அளவை விட 121 சதவீதம் அதிகமாகும்.

2020ஆம் ஆண்டில் கொரோனா பிரச்சினை வந்த பிறகு இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு பெரும் வீழ்ச்சியை எட்டியது. அதன் பின்னர் இயல்பு நிலை திரும்பிய பிறகு எரிபொருள் விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் இப்போது பருவமழை ஏமாற்றம் போன்ற காரணங்களால் வேளாண் துறையில் செயல்பாடுகள் குறைந்ததால் டீசல் பயன்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்