ஆப்நகரம்

பெட்ரோல் - டீசல் விற்பனை மீண்டும் உயர்வு!

ஊரடங்கு தளர்ந்து வாகனப் போக்குவரத்து தொடங்கியதால் ஜூன் மாதத்தில் எரிபொருள் பயன்பாடு 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

Samayam Tamil 10 Jul 2020, 10:06 pm
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டதோடு, பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டன. மக்கள் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் குறைந்ததால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் - டீசல் விற்பனை முடங்கியது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் மட்டுமே இயங்கின. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊரடங்கு காலத்தில் பெட்ரோல் - டீசல் விற்பனை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
Samayam Tamil petrol


இந்நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் தேவை மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 11 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. எனினும் இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 7.9 சதவீதம் குறைவுதான். இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு 16.28 மில்லியன் டன்னாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டித் தூக்கிய அம்பானி.... பணக்காரர் பட்டியலில் முன்னேற்றம்!

2019ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் எரிபொருள் பயன்பாடு 17.67 மில்லியன் டன்னாக இருந்தது. இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் பயன்பாடு 9.93 மில்லியன் டன்னாகச் சரிந்தது. இது கடந்த 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்படும் மிகப் பெரிய சரிவாகும். எனினும் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், கொரோனாவுக்கு முந்தைய அளவில் 92 சதவீத அளவு எட்டப்பட்டுள்ளது. டீசலுக்கான தேவை 84.5 சதவீத அளவையும், பெட்ரோலுக்கான தேவை 86.4 சதவீதத்தையும் அடைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி: நாணய நிதியம் எச்சரிக்கை!

ஜூன் மாதத்தில் மொத்தம் 6.3 மில்லியன் டன் அளவு டீசலும், 2.28 மில்லியன் டன் பெட்ரோலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு பயன்பாடு 15.7 சதவீதம் அதிகரித்து 2.07 மில்லியன் டன்னாக இருக்கிறது. அதேநேரம், விமான எரிபொருள் பயன்பாடு 65.8 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2,22,000 டன்னாக இருந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்