ஆப்நகரம்

அசுர வளர்ச்சியில் அதானி.. வேடிக்கை பார்க்கும் அம்பானி!

வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் கௌதம் அதானி முன்னிலை பெற்றுள்ளார்.

Samayam Tamil 25 Apr 2022, 2:49 pm
உலக அளவில் சொத்து மதிப்பு அடிப்படையில் மிகப் பெரிய பணக்காரர்களுக்கான பட்டியலை ஃபோர்ப்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான கௌதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார். ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும் இவர்தான். நீண்ட காலமாகவே முகேஷ் அம்பானிதான் இந்தியா மற்றும் ஆசிய அளவில் மிகப் பெரிய பணக்காரரான இருந்தார். அவரைப் பின்னுக்குத் தள்ளிய அதானி தற்போது சர்வதேச பட்டியலிலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.
Samayam Tamil adani


ஃபோர்ப்ஸ் பட்டியலில் 122.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி 5ஆவது இடத்தில் இருக்கிறார். அதேநேரம், ஐந்தாம் இடத்தில் இருந்த வாரன் பஃபெட் சரிவை சந்தித்திருக்கிறார். இவரது சொத்து மதிப்பு தற்போது 121.7 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. உலகின் மிகச் சிறந்த முதலீட்டாளர் என்ற பெருமைக்குரிய வாரன் பஃபெட்டை இந்தியாவின் கௌதம் அதானி பின்னுக்குத் தள்ளியிருப்பது இந்தியாவுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது. முகேஷ் அம்பானியைத் தொடர்ந்து கௌதம் அதானியும் ஆதிக்கம் செலுத்துகிறார்.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் டெஸ்லா நிறுவனத் தலைவரான எலான் மஸ்க். அவரது சொத்து மதிப்பு தற்போது 269.7 பில்லியன் டாலராக உள்ளது. அதைத் தொடர்ந்து அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் 170.2 இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பெர்னார்டு அர்னால்டு மூன்றாம் இடத்திலும், பில் கேட்ஸ் நான்காம் இடத்திலும் இருக்கின்றனர்.

பசி, பட்டினியில் இந்தியா.. அதானியின் சூப்பர் அட்வைஸ்!
இந்தியாவின் முகேஷ் அம்பானி 101.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9ஆவது இடத்தில் இருக்கிறார். இவருக்கு முன்னதாக, லாரி எலிசன் 7ஆம் இடத்திலும், லாரி பேஜ் 8ஆம் இடத்திலும் உள்ளனர். 10ஆம் இடத்தில் இருப்பவர் சர்ஜி பிரின்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்