ஆப்நகரம்

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் கவுதம் அதானி சந்திப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இன்று சென்னையில் சந்தித்துப் பேசினார்.

TNN 30 Jun 2016, 6:43 pm
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இன்று சென்னையில் சந்தித்துப் பேசினார்.
Samayam Tamil gautam adani meets tamil nadu chief minister jayalalithaa in chennai
முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் கவுதம் அதானி சந்திப்பு


இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, அதானி குழுமத்தின் மேலாண் இயக்குனர் ராஜேஷ் அதானியும் உடனிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலை தொடங்க அதானி குழுமம் முயற்சித்து வருகிறது. இதன்ஒருபகுதியாக, ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் 648 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின்உற்பத்தி மையம் நிறுவும் பணியில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, ரூ.4,536 கோடி ரூபாய் முதலீடும் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றியும், அடுத்தபடியாக மேற்கொள்ளவிருக்கும் தொழில் முதலீடுகள் குறித்தும் கவுதம் அதானி மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்