ஆப்நகரம்

பொருளாதார வளர்ச்சி சாத்தியமா? ஆய்வில் எச்சரிக்கை!

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று எஸ் & பி ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Sep 2020, 9:13 pm
இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாகவே மிக மோசமான நிலையில் உள்ளது. வளர்ச்சி இல்லை என்பதோடு பின்னோக்கிச் சென்று வீழ்ச்சிப் பாதையில் இந்தியா பயணிக்கிறது. போதாத குறைக்கு கொரோனா பாதிப்பால் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இந்தியா வரலாறு காணாத அளவில் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்து வரும் நிலையில், எஸ் & பி நிறுவனமும் தனது மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டில்தான் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேம்படும் எனவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.
Samayam Tamil gdp


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும் பட்சத்தில் இந்தியாவின் கடன் மதிப்பீட்டை மேலும் குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் எஸ் & பி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவுக்கான கடன் மதிப்பீட்டைப் பொறுத்தவரையில் நீண்ட கால அடிப்படையில் BBB மதிப்பீட்டையும், குறுகிய கால அடிப்படையில் A-3 மதிப்பீட்டையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது. அதுவும் அந்நியச் செலாவணி கையிருப்பு நிலை மேம்பட்டதால்தான் இந்த மதிப்பீடு வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

யெஸ் வங்கி விவகாரம்: ரூ.127 கோடி சொத்து முடக்கம்!

சர்வதேச அளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் இந்தியாவைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், கொரோனா வருவதற்கு முன்னரே இந்தியப் பொருளாதார வளர்ச்சி மோசமாகவே இருந்ததாகவும் எஸ் & பி நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வருவதற்கு பொருளாதாரச் சீர்திருத்தங்களும், முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இந்தியாவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்