ஆப்நகரம்

சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வரும் ஜெர்மன் நிறுவனம்!

ஜெர்மன் நாட்டை சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான வான் வெல்க்ஸ் தனது ஒட்டுமொத்த உற்பத்தியையும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம் மாற்ற திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 17 May 2020, 6:32 pm
கொரோனா நெருக்கடியை தொடர்ந்து சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு உற்பத்தியை இடம் மாற்ற பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியில் ஒரு பகுதியை இந்தியாவுக்கு இடம் மாற்ற திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil வான் வெல்க்ஸ்


மறுபுறம், சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு ஈர்ப்பதற்காக பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் பிரதமர் நரேந்திர மோடி பரிசீலித்து வருகிறார். இதுகுறித்து அவர் அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சீனாவில் உற்பத்தி மேற்கொண்டுவரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான வான் வெல்க்ஸ் தனது உற்பத்தியை இந்தியாவுக்கு இடம் மாற்ற முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் சீனாவில் காலணி உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. சீனாவிலிருந்து ஒட்டுமொத்த உற்பத்தியையும் இந்தியாவுக்கு கொண்டுவர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இந்நிறுவனம் உற்பத்தியை தொடங்கவுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் சுமார் 80 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்திற்கு 10 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆன்லைனிலும், சுமார் 500 சில்லறை வர்த்தக நிலையங்களிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் கிடைக்கின்றன. இதுகுறித்து மத்திய சிறு குறு நடுத்தர தொழில் துறை இணையமைச்சர் உதய் பஹன் சிங் , “வான் வெல்க்ஸ் நிறுவனத்தின் முடிவால் இந்தியாவில், முக்கியமாக உத்தரப் பிரதேசத்தில் பலருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்