ஆப்நகரம்

இந்த ஒரு ரூபாய் நாணயம் உங்க கிட்ட இருந்தா நீங்க லட்சாதிபதி!

ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்து நீங்கள் ரூ.1 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம்.

Samayam Tamil 22 Jun 2021, 1:22 pm
பழைய பொருட்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அதுவும் பழைய நாணயங்களுக்கு பல்வேறு வலைதளங்களில் தேவை அதிகமாக இருக்கிறது. அந்த நாணயத்தின் அசல் மதிப்பு மிக மிகக் குறைவு என்றாலும் அதற்குக் கிடைப்பதோ பெரிய தொகை. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும். பல்வேறு வலைத்தளங்களில் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் நீங்கள் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். இதுபோன்ற வாய்ப்பு சமீப நாட்களில் நிறையப் பேருக்குக் கிடைத்துள்ளது.
Samayam Tamil one rupee coin


Quickr தளத்தில்தான் பழைய 1 ரூபாய் நாணயத்துக்கு பணம் பெறும் வாய்ப்பு இப்போது வந்துள்ளது. 1862ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஒரு ரூபாய் நாணயத்தை இந்த வெப்சைட்டில் விற்பனை செய்யலாம். india mart, OLX வெப்சைட்டிலும் இந்த நாணயத்தை விற்பனை செய்து நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். இந்த நாணயத்தைக் கொடுத்தால் உங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் பணம் கிடைக்கிறது. குயின் விக்டோர்யாவின் இந்த நாணயம் அரிய வகை நாணயங்களின் பிரிவில் வருகிறது.

மாதம் ரூ.3,000 பென்சன்... உடனே இந்தத் திட்டத்தில் சேருங்க!
இந்த நாணயத்தை நீங்கள் விற்பனை செய்து பணம் சம்பாதிக்க, முதலில் நீங்கள் Quickr தளத்தில் ஆன்லைன் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். ரூபாய் நோட்டின் புகைப்படத்தை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அந்த நோட்டை வாங்குபவர் உங்களைத் தொடர்பு கொள்வார். அங்கிருந்து, கட்டணம் மற்றும் விநியோக விதிமுறைகளின்படி உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டை விற்பனை செய்து பணம் ஈட்டலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்