ஆப்நகரம்

கார் வாங்க சூப்பர் வாய்ப்பு... 4,000 ரூபாய் இருந்தால் போதும்!

மாதம் 4,111 ரூபாய் ஈஎம்ஐ செலுத்தி கார் வாங்கும் சூப்பர் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 10 Aug 2021, 3:55 pm
கொரோனா வந்த பிறகு பொதுமக்கள் அனைவரும் முடிந்த வரையில் சொந்த பைக், காரிலேயே பயணம் செய்ய விரும்புகின்றனர். சொந்தமாக ஒரு காரோ அல்லது பைக்கோ இருந்தால் அது போக்குவரத்து வசதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொரோனா பரவல், சமூக இடைவெளி போன்ற பிரச்சினைகளையும் தவிர்க்கலாம். ஆனால், தற்போதைய நெருக்கடியான சூழலில் நிறைய செலவழித்து கார் வாங்குவது என்பது சிரமமான ஒன்றுதான்.
Samayam Tamil tata


இதுபோன்ற சூழலில் குறைந்த விலைக்கு கார் கிடைத்தால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்! அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இப்போது வந்துள்ளது. டாடா நிறுவனத்தின் சொகுசு கார்களை நீங்கள் குறைந்த விலைக்கு வாங்கலாம். இதுபோக ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த தொகையை ஈஎம்ஐ முறையில் செலுத்தி உங்களுக்குப் பிடித்தமான காரை ஓட்டிச் செல்லலாம். இதற்கான சிறப்புத் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் டிகோர், டியாகோ, நெக்ஸான், ஹேரியர் உள்ளிட்ட கார்களை குறைந்த விலைக்கு வாங்கலாம்.

உங்க PF அக்கவுண்ட் குளோஸ் ஆகிடும்... உடனே இதைப் பண்ணுங்க!
டாடா டிகோர் காரை மாதம் ரூ.4,111 ஈஎம்ஐ தொகையில் நீங்கள் வாங்கலாம். இதுபோக தள்ளுபடிச் சலுகையும் வழங்கப்படுகிறது. ரூ.20,000 தள்ளுபடி, ரூ.15,000 எக்சேஞ்ச் போனஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. டாடா டிகோர் காருக்கு ரூ.20,000 போனஸ் சலுகை கிடைக்கிறது. எனினும் டாடா அல்ட்ராஸ் காருக்கு சலுகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல, டாடா நெக்ஸான் பெட்ரோல் வேரியண்டுக்கும் சலுகை கிடையாது. டாடா ஹேரியர் காருக்கு ரூ.25,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்