ஆப்நகரம்

வீடு கட்ட ஆசையா? குறைந்த வட்டியில் கடன்!

குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வசதியை இந்த வங்கி அறிவித்துள்ளது.

Samayam Tamil 3 Mar 2021, 7:51 pm
தனக்கென சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்பது பலரது கனவாகவும், லட்சியமாகவும் இருக்கும். அதுவும், கொரோனா வந்த பிறகு சொந்த வீடு இல்லையே என்று ஏங்கியவர்கள் ஏராளம். வீட்டு வாடகைக்கே சம்பளத்தில் பெரும் தொகையைக் கொடுக்க வேண்டியதாக உள்ளது. சம்பளமும் வேலையும் இல்லாமல் போனால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். எனவே எப்படியாவது வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த வங்கியில் கடன் வாங்கலாம்; சிறப்புச் சலுகைகள் ஏதேனும் உள்ளதா; கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்த முடியுமா என்றெல்லாம் ஆலோசிப்பார்கள்.
Samayam Tamil home loan


வீடு கட்ட நினைப்பவர்கள் வீட்டுக் கடன் வாங்கி எளிதாக வீடு கட்டிவிடலாம். ஆனால், எந்த வங்கியில் கம்மியான விகிதத்தில் வட்டி விகிதம் உள்ளது என்றும், மற்ற சலுகைகளையும் பார்த்து வாங்கவேண்டும். இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வீட்டுக் கடன் வாங்க நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வீட்டுக் கடன்களுக்கான வட்டியை 0.5 சதவீதம் குறைப்பதாகவும், வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.

பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... குடும்ப பென்சன் இனி ஈசியா கிடைக்கும்!
இந்த வட்டிக் குறைக்கு மார்ச் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல, மார்ச் 31ஆம் தேதி வரையில் செயல்பாட்டுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியைத் தொடர்ந்து கோடாக் வங்கியும் தனது வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 10 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 6.65 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த வட்டி விகிதம் மார்ச் 31 வரையில் நடைமுறையில் இருக்கும். முன்னதாக இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாகக் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்