ஆப்நகரம்

மேல் படிப்பு படிக்க ஆசையா?.. கவலை வேண்டாம்!! கம்மி வட்டியில் கடன்!!

உயர் கல்வி கற்க கடன் வாங்க நினைப்பவர்கள் கவனத்துக்கு...

Samayam Tamil 25 Feb 2022, 6:37 pm
இந்தியாவில் உள்ள நிறையப் பேருக்கு உயர் கல்வி என்பது மிகவும் பெரிய விஷயம். கட்டணங்கள் அதிகமாக இருக்கிறது என்பதற்காகவே நிறையப் பேர் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். வசதி இருந்தால் மட்டுமே படிக்க முடியும் என்று ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் சாமானிய மக்களும் உயர் கல்வி கற்க முடியும். அதற்கு வங்கிகள் உதவுகின்றன. வங்கிகளிலேயே கல்விக் கடன்கள் எளிதாகக் கிடைக்கின்றன. வட்டியும் குறைவுதான்.
Samayam Tamil loan


கல்விக் கடனைப் பொறுத்தவரையில், இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரையில் கடன் கிடைக்கும். அதேபோல, வெளிநாட்டில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையில் கடன் பெறலாம். எனினும், கல்வித் தகுதி, பெற்றோரின் வருமானம், கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றைப் பொறுத்து கடன் தொகை மாறுபடலாம்.

SBI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. ஒரு போன் போட்டால் போதும்!
நீங்களும் கல்விக் கடன் வாங்குவதாக இருந்தால், எந்த வங்கியில் வட்டி குறைவு, ஈஎம்ஐ எவ்வளவு செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கலாம். உதாரணமாக, நீங்கள் 7 ஆண்டு கால வரம்பில் ரூ.20 லட்சம் கடன் வாங்கினால் அதற்கு வட்டி எவ்வளவு என்று இங்கே பார்க்கலாம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - 6.70%

பேங்க் ஆஃப் பரோடா - 6.75%

பஞ்சாப் நேஷனல் பேங்க் - 6.75%

ஐடிபிஐ பேங்க் - 6.75%

யூனியன் பேங்க் - 6.80%

செண்ட்ரல் பேங்க் - 6.85%

பேங்க் ஆஃப் இந்தியா - 6.85%

கனரா பேங்க் - 6.90%

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 6.95%

இந்தியன் பேங்க் - 7%

பஞ்சாப் & சிந்த் பேங்க் - 7%

இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் - 7.25%

யூசிஓ பேங்க் - 7.30%

சௌத் இந்தியன் பேங்க் - 8%

ஈஎம்ஐ தொகையைப் பொறுத்தவரையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.29,893 செலுத்த வேண்டியிருக்கும். சௌத் இந்தியன் வங்கியில் ரூ.31,172.

அடுத்த செய்தி

டிரெண்டிங்