ஆப்நகரம்

கை நிறைய பென்சன் கிடைக்கும்.. முதியவர்களுக்கு இனி பிரச்சினையே இல்லை!

இந்த பாலிசியில் உங்களுக்கு 28,000 ரூபாய் பென்சன் கிடைக்கும். முழு விவரம் இதோ..

Samayam Tamil 25 Sep 2022, 11:07 am
அனைவருக்குமே தங்களது கடைசி காலத்தில் பண நெருக்கடி இல்லாத சுகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நிலையான ஒரு தொகை பென்சன் என்ற பெயரில் வந்து கொண்டே இருந்தால் பெரும் உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட வாய்ப்பை எல்ஐசி நிறுவனம் வழங்குகிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil pension


எல்ஐசி நிறுவனம் (இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்) நீண்ட கால முதலீட்டிற்கான ஒரு சிறந்த நிறுவனமாகும். நீங்கள் ஓய்வு பெறும் திட்டம் இருந்தாலோ அல்லது நிதி நெருக்கடி இல்லாத சுகமான வாழ்க்கை வாழ விரும்பினாலோ எல்ஐசி அதற்கு உதவுகிறது. ஓய்வுக் காலத்தில் சுகமான வாழ்க்கைக்காக எல்ஐசி செயல்படுத்தி வரும் திட்டம்தான் ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டம்.

இந்த ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டத்தின் மூலம் தினமும் 80 ரூபாய் முதலீடு செய்தாலே உங்கள் வாழ்க்கையின் கடைசி நாட்களில் ரூ.28,000 ரூபாய் வரையில் பென்சன் கிடைக்கும். இந்த பாலிசியை நீங்கள் வாங்க விரும்பினால் உங்களது குறைந்தபட்ச வயது 28 ஆண்டுகளாக இருக்க வேண்டும். இந்த பாலிசியில் 25 வருட காலத்திற்குப் பிறகு பலன் கிடைக்கிறது.

இந்த பாலிசியின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரையில்கூட உங்களால் லாபம் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் முதலீடு மற்றும் காப்பீடு ஆகிய இரண்டின் பலனையும் பெற முடியும். ஒரு நபர் தனது 25 வயதில் தொடங்கி 35 வருட காலத்திற்கு முதலீடு செய்தால் அவர் முதல் ஆண்டில் 4.5 சதவீத வரியுடன் பிரீமியம் செலுத்த வேண்டும். அதாவது 29,555 ரூபாய்.

முதல் பிரீமியத்தை செலுத்தும்போது இதற்குப் பிறகு 79 ரூபாயை 2.5 சதவீத வரியுடன் செலுத்த வேண்டும். இதன்படிப் பார்த்தால் நீங்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.50.15 லட்சம் பெற முடியும். அதன்படி, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.27,664 ஓய்வூதியம் பெறுவீர்கள். தினமும் ரூ.80 என்பது மிகச் சிறிய தொகைதான். ஆனால் இதை நீங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் மாதத்துக்கு ரூ.28,000 வரையில் உங்களால் பென்சன் வாங்க முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்