ஆப்நகரம்

49 ரூபாய் இருந்தால் போதும்... இந்த பைக் உங்களுக்கு சொந்தம்!

தினமும் 49 ரூபாய் செலுத்தி டிவிஎஸ் எக்ஸெல் பைக்கை நீங்கள் வாங்கலாம்.

Samayam Tamil 20 Jun 2021, 3:37 pm
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்களிடையே நிதி நெருக்கடி நிலவுகிறது. கொரோனா பரவல் அச்சத்தால் பைக் - கார் போன்ற வாகனங்களையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த சூழலில் நீங்கள் ஒரு பைக் வாங்க விரும்பினால், உங்களிடம் அதற்கான பட்ஜெட் இல்லையென்றால் கவலை வேண்டாம். சிறப்புச் சலுகைகளின் கீழ் மிக் குறைந்த விலைக்கு நீங்கள் பைக் வாங்க முடியும். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன.
Samayam Tamil XL


டிவிஎஸ் நிறுவனம் சிறப்பு விற்பனைத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, டிவிஎஸ் எக்ஸெல் 100 பைக்கை நீங்கள் சுலபமாக வாங்கலாம். இதை வாங்குவதற்கு ஈஎம்ஐ வசதி வழங்கப்படுகிறது. மாதத்துக்கு ரூ.1,470 செலுத்தினால் போதும். அதாவது ஒரு நாளைக்கு 49 ரூபாய். இது மிகக் குறைந்த ஈஎம்ஐ சலுகையாகும். முன்பணமாக நீங்கள் 7,999 ரூபாய் செலுத்தினாலே இந்த பைக்கை வாங்கிச் செல்லலாம். பொருட்களை ஏற்றிச் செல்லவும், வணிகப் பயன்பாட்டுக்கும் இது சிறந்த வாகனமாகத் திகழ்கிறது.

2 ரூபாய் இருக்கா? 5 லட்சத்தை அள்ளிட்டு போங்க!
இந்த பைக்கை வாங்குபவர்களுக்கு மற்றொரு சிறப்புச் சலுகையும் வழங்கப்படுகிறது. அதாவது பைக்கை வாங்கிய முதல் 6 மாதங்களுக்கு ஈஎம்ஐ செலுத்தத் தேவையில்லை. அதன் பின்னர் செலுத்தினால் போதும். கொரோனா ஊரடங்கால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். L & T, டிவிஎஸ் கிரெடிட், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் போன்றவற்றின் வாயிலாக இச்சலுகையை நீங்கள் பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்