ஆப்நகரம்

Recession: நெருங்கும் பொருளாதார மந்தநிலை.. சரிய தொடங்கிய உலக வர்த்தகம்!

உலகளவில் வர்த்தகம் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதாக உலக வர்த்தக அமைப்பின் குறியீடு வாயிலாக தெரிகிறது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 29 Nov 2022, 1:05 pm
உலகளவில் பொருளாதார மந்தநிலை உருவாகலாம் என்ற அச்சம் ஏற்கெனவே பரவலாக உள்ளது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2023ஆம் ஆண்டு வரை சர்வதேச வர்த்தக வளர்ச்சியின் வேகம் குறைவதற்கு வாய்ப்பிருப்பதாக உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil global trade
trade


உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization) சர்வதேச அளவில் வர்த்தகத்தின் நிலவர்ம் குறித்து காலாண்டு வாரியாக பாரோமீட்டர் (Barometer) வெளியிட்டு வருகிறது. இதில் உலக வர்த்தகத்தின் நிலவரத்துக்கு ஸ்கோரும் வழங்கப்படும்.

உலக வர்த்தக அமைப்பின் பாரோமீட்டர்

ஏற்றுமதி, விற்பனை உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உலக வர்த்தக அமைப்பு இந்த பாரோமீட்டரை தயார் செய்கிரது. இந்த பாரோமீட்டரில் ஸ்கோர் 100க்கு மேலே இருந்தால் வர்த்தகம் வலுவாக இருக்கிறது என பொருள். அதுவே, ஸ்கோர் 100க்கு கீழே போனால் வர்த்தகம் வீக்காக உள்ளது என பொருள்.

டாட்டா பாய் பாய்.. இந்தியாவை விட்டு ஓடும் பணக்காரர்கள்!
துணை குறியீடுகள்

இந்த பாரோமீட்டர்களில் மொத்த உலக வர்த்தகம் மட்டுமல்லாமல், வர்த்தகத்தை குறிக்கும் துணை குறியீடுகளும் உள்ளன. தற்போது உலக வர்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏற்றுமதி ஆர்டர்களுக்கான குறியீடு 91.7 ஆகவும், விமான சரக்குப் போக்குவரத்து குறியீடு 93.3 ஆகவும், எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான குறியீடு 91 ஆகவும் உள்ளது.

எனவே, சர்வதேச அளவில் டிமாண்ட் குறைந்துள்ளதையே இந்த துணை குறியீடுகள் குறிக்கின்றன. மறுபுறம், கண்டய்னர் சரக்குப் போக்குவரத்து (கப்பல்) குறியீடு 99.3 ஆக உள்ளது. மூலப் பொருட்கள் குறியீடு 97.6 ஆக உள்ளது.

ஆட்டோமொபைல் வர்த்தகம்

ஆட்டோமொபைல் பொருட்களுக்கான குறியீடு மட்டும் 100ஐ தாண்டி 103.8 ஆக உள்ளது. அமெரிக்காவில் வாகன விற்பனை வலுவாக உயர்ந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும், ஜப்பானில் இருந்து வாகனங்கள் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.

உலகப் பொருளாதார மந்தநிலை


கடந்த சில மாதங்களாகவே உலகப் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் ஆரம்பப் புள்ளி, பிப்ரவரி மாதம் உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கியதுதான். இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது.

இதன் விளைவாக சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல், எரிவாயு, இயற்கை எரிவாயு விலை பயங்கரமாக உயர்ந்தது. இதனால் பல நாடுகளில் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயர்ந்தது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் முதலீடுகள் குறைந்துவிட்டன. செலவுகளை குறைப்பதற்காக பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன.

இதன் விளைவாக, வரும் மாதங்களில் உலகப் பொருளாதார மந்தநிலை உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்