ஆப்நகரம்

கோரமண்டல் ரயில் விபத்து.. தள்ளிப் போகும் வந்தே பாரத்!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 3 Jun 2023, 11:48 am
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தை கருத்தில் கொண்டு, கோவா-மும்பை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கொடியேற்றும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கொங்கன் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காலை கோவா-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கொடியசைத்து துவக்கி வைப்பதாக இருந்தது.
Samayam Tamil vande


அதேபோல, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மட்கான் ஸ்டேஷனில் இவ்விழாவிற்கு வரவிருந்தார். இந்நிலையில், நேற்று இரவில் ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான நிலையில், விபத்து நடந்த இடத்தை ரயில்வே அமைச்சர் பார்வையிடுவார் என்றும், விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவா - மும்பை இடையேயான இந்த வந்தே பாரத் ரயில் நாட்டின் 19ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இது கோவாவில் உள்ள மட்கான் மற்றும் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் இடையே இயக்கப்படவிருக்கிறது. ஆனால் இப்போது இந்த திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரயில் தொடங்குவதற்கான திட்டம் தாமதமாகியுள்ளது.

முன்னதாக, மே 29ஆம் தேதியன்று அசாமின் முதல் மற்றும் நாட்டின் 18ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில் இரு மாநிலங்களிலும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அதோடு சரக்கு ரயிம் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. சுமார் 350 பயணிகள் காயமடைந்த நிலையில், வந்தே பாரத் நிகழ்ச்சி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்