ஆப்நகரம்

பஸ் டிக்கெட் செலவில் விமானத்தில் பறக்கலாம்.. சூப்பர் சலுகை!

குடியரசு தினத்தை முன்னிட்டு சலுகை கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது கோஏர் நிறுவனம். இதில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படாது. வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு கோஏர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Samayam Tamil 24 Jan 2021, 1:19 pm

பட்ஜெட் ஏர்லைன் நிறுவனமான கோஏர் (GoAir) அதிரடி சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு 'Republic Day Freedom Sale' என்ற பெயரில் சலுகைகளை வழங்கி வருகிறது.
Samayam Tamil GO air


இந்த சலுகையின் கீழ் வெறும் 859 ரூபாய் முதல் முதல் விமான டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. மேலும், டிக்கெட் மாற்றத்துக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது.

கேஸ் சிலிண்டர்: உங்களுக்கு பணம் வரலையா? அப்போ இதை செய்யுங்க!
ஜனவரி 22ஆம் தேதி முதல் ஜனவரி 29ஆம் தேதி வரை சலுகை விலையில் டிக்கெட் வழங்கப்படும். இந்த காலகட்டத்தில் சுமார் 10 லட்சம் விமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும்.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான விமான பயணங்களுக்கு பயணிகள் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம். One-way டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

உள்நாட்டுக்குள் விமானத்தில் பயணிக்க திட்டமிட்டிருக்கும் பயணிகள் மிகக் குறைந்த விலையில் டிக்கெட் பதிவு செய்து நிறைய பணத்தை சேமித்துவிடலாம் என கோஏர் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை குறைவு.. நகை வாங்க சரியான நேரம்!

கவர்ச்சியான சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல விரும்புவோர் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி கோஏர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கவுசிக் கோனா தெரிவித்துள்ளார்.

இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த சலுகையில் all-inclusive டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது, வரி, இதர கட்டணங்கள் எல்லாமே உள்ளடக்கிய டிக்கெட்தான் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, குறிப்பிடப்பட்டுள்ள சலுகை விலையை தாண்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்