ஆப்நகரம்

பொருளாதாரம் சரியில்லை.. ஊழியர்களை வெளியேற்றிய நிறுவனம்!

பொருளாதார சூழல் சரியில்லாததால் ஊழியர்களை வெளியேற்றிய இந்திய நிறுவனம்.

Samayam Tamil 7 Jun 2022, 5:50 pm
ருபீக் (Rupeek) நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் நகைக் கடன் சார்ந்த நிதித் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது.
Samayam Tamil layoff


இந்நிலையில், ருபீக் நிறுவனம் முதல்முறையாக தனது ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. ருபீக் நிறுவனத்தில் சுமார் 1200க்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் 15% ஊழியர்களை வெளியேற்றியுள்ளது ருபீக் நிறுவனம்.

அதாவது, 180க்கு மேற்பட்ட ஊழியர்களை வெளியேற்றுவதற்கு ருபீக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பொருளாதார சூழல் சரியில்லாத நிலையில் ஊழியர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக ருபீக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு சிக்கல்.. மத்திய அரசு உத்தரவு!
ருபீக் நிறுவனத்தை 2015ஆம் ஆண்டில் சுமித் மணியர், அஷ்வின் சோனி ஆகியோர் இணைந்து தொடங்கினர். இந்நிறுவனம் நகைக் கடன் பெறுவது மற்றும் சும்மா வீட்டில் இருக்கும் தங்கத்தின் மூலம் வருமானம் ஈட்டுவது போன்றவற்றுக்கு வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.

இதுபோக ருபீக் கோல்டு கிரெடிட் கார்டு (Gold Credit card) சேவையும் வழங்கி வருகிறது. ருபீக் நிறுவனத்துக்கு 5 லட்சத்துக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போதைய சூழலில் இந்தியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ருபீக் செயல்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்