ஆப்நகரம்

தங்கம் இறக்குமதி... கொரோனாவுடன் போராடி வெற்றி!

இந்தியாவின் தங்கம் இறக்குமதி கொரோனாவுக்கு முந்தைய அளவை எட்டிவிட்டது.

Samayam Tamil 21 Oct 2021, 9:55 am
சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் சீனாவைத் தொடர்ந்து இரண்டாவது மிகப் பெரிய நாடாக உள்ள இந்தியாவில், நகை உற்பத்திக்காகவே பெரும்பாலான தங்கம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் தங்கத்துக்கான மோகம் எப்போதுமே அதிகமாக இருக்கும். அதோடு மிகச் சிறந்த முதலீட்டுப் பொருளாகவும் தங்கம் இருக்கிறது. இதனால் அதிக தேவைக்கு ஏற்ப அதிகளவு தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சுமார் 800 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. ஆனால் கொரோனா வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
Samayam Tamil gold import


ஒவ்வொரு மாதமும் தங்கம் இறக்குமதி குறைந்துகொண்டே சென்றது. இந்நிலையில், கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தின் அளவு மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த கவுன்சிலின் தலைவர் கோலின் ஷா இதுகுறித்து மேலும் கூறுகையில், 2021 ஏப்ரல் - செப்டம்பர் காலத்தில் இந்தியா மொத்தம் 432.5 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாகவும், இது கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 420 டன் தங்கத்தை விட அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

Gold rate: இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை!

மதிப்பு அடிப்படையில் பார்த்தால் 2021 செப்டம்பர் மாத நிலவரப்படி மொத்தம் 23.95 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்கம் இறக்குமதி கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல, உள்நாட்டில் தங்கத்துக்கான தேவையும், வெளிநாட்டு நகை ஏற்றுமதிக்கான தேவையும் உயர்ந்ததால் தங்கம் இறக்குமதி மேலும் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டில் கொரோனா வந்த பிறகு தங்கம் இறக்குமதியில் 75 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டு, 121 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

இனி வரும் மாதங்களில் தங்கம் இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என்று நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்