ஆப்நகரம்

ஆபரணத்தங்கம் விலையில் தொடரும் சரிவு

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து சரிவுடன் நீடிக்கிறது.

TNN 26 Apr 2017, 5:27 pm
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து சரிவுடன் நீடிக்கிறது.
Samayam Tamil gold price continues down in chennai bullion
ஆபரணத்தங்கம் விலையில் தொடரும் சரிவு


கடந்த வார இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் விலை ரூ.22,704 என்ற உச்சத்தை தொட்டிருந்தது. ஆனால், இந்த வாரத்தில் தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருகிறது. இதன்படி, தற்போது ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.22,240 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,780 என உள்ளது. 24 கேரட் 10 கிராம் சுத்தமான தங்கக் கட்டியின் விலை ரூ.29,190 எனவும் காணப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு, ரூ.43.40 ஆகவும், கிலோ பார் விலை ரூ.43,400 ஆகவும் குறைந்திருந்தது.

இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்திருந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மாற்று மதிப்பு ரூ.64.28 ஆகவும் முடிந்தது.

Chennai Bullion: Gold price ended as Rs 22,240 per sovereign.

அடுத்த செய்தி

டிரெண்டிங்