ஆப்நகரம்

ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. ஏன் இவ்வளவு வேகம்? காரணம் இதுதான்!

இன்று ஒரே நாளில் தங்கம் விலை பயங்கர வேகத்தில் உயர்ந்ததற்கு காரணம் என்ன?

Samayam Tamil 5 Aug 2022, 5:36 pm
தங்கம் என்பது ஆபத்துக் காலங்களில் மதிப்பு உயரக்கூடிய சொத்தாக இருக்கிறது. பணவீக்கம், போர் சூழல், பொருளாதார சரிவு என எந்தவொரு நெருக்கடி ஏற்பட்டாலும் தங்கத்தை அசைக்க முடியாது. சொல்லப்போனால், இதுபோன்ற நெருக்கடி காலங்களில் தங்கத்தின் மதிப்பு உயரும்.
Samayam Tamil gold


அண்மையில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்தபோது தங்கம் விலையும் உயர்ந்தது. உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கியபோதும் தங்கம் விலை உயர்ந்தது. கடந்த சில வாரங்களாக சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற்படும் என அச்சம் எழுந்துள்ளது.

பத்திர லாபம் குறைந்துள்ளதாலும், பொருளாதார சரிவு ஏற்படும் என்ற அச்சத்தாலும், டாலர் மதிப்பு சரிவாலும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலை இன்று பயங்கரமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் வெளியாகவுள்ளது. தங்கம் விலை உயர இதுவும் ஒரு முக்கிய காரணம்.

EMI: இனி அதிக இஎம்ஐ கட்டணும்.. கடன் வாங்கியவர்கள் கண்ணீர்!
அமெரிக்காவில் பணவீக்கம், பத்திர லாபம் ஆகியவற்றை போலவே வேலைவாய்ப்பு விவரங்களும் பொருளாதாரத்தின் போக்கை மதிப்பிடுவதற்கான குறியீடாக கருதப்படுகிறது. நிறைய பேர் வேலைவாய்ப்பை இழந்தால் பொருளாதாரம் நல்ல பாதையில் இல்லை என்பது பொருள்.

எனவே, தற்போது தங்கத்தின் மதிப்பு கடகடவென உயர்ந்துள்ளது. இன்று இந்தியாவில் சரக்கு சந்தை (MCX) வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமுக்கு 52,125 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஸ்பாட் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 1790.73 டாலர் அளவில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்