ஆப்நகரம்

எகிறும் தங்கம்.. இப்படி முதலீடு செஞ்சா லாபம் கிடைக்கும்!

தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் எப்படி எல்லாம் தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்?

Samayam Tamil 20 Apr 2021, 7:11 pm
தங்கம் விலை சில தடுமாற்றங்களுக்கு பின்னர் MCXஇல் 10 கிராமுக்கு 47000 ரூபாயை தாண்டியுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதியன்று தங்கம் விலை 10 கிராமுக்கு 4800 ரூபாயாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இதுவரை தங்கம் விலை 5% உயர்ந்துள்ளது.
Samayam Tamil Gold


9 ரூபாய்க்கு சிலிண்டர் வேணுமா? உடனே முந்துங்கள்!
நடுவே பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தங்கம் விலை உயர்ந்தது. சர்வதேச மார்க்கெட்டும் சாதகமாக இருந்ததால் விலை உயர்ந்தது. பணவீக்கம் அதிகரிப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் தங்கத்துக்கு கூடுதல் வலு சேர்ந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில் தங்கத்தில் எப்படி எல்லாம் முதலீடு செய்வது? சவரன் தங்கப் பத்திரம், Gold ETF ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்ல சாய்ஸ். சேமிப்பில் இருந்து 5 முதல் 10 விழுக்காட்டை இதுபோன்ற பேப்பர் தங்க முதலீடுகளில் பயன்படுத்தலாம்.

தங்க ETF என்பது மியூச்சுவல் ஃபண்ட் போலதான். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பங்குகளில் முதலீடு செய்யப்படுவது போல தங்க ETFகளில் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது.

வீட்டுக் கடனுக்கு இனி அதிக ஈஎம்ஐ கட்டணும்!
தங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி விநியோகித்து வருகிறது. தங்கப் பத்திரம் என்பது ஏறக்குறைய நிஜத் தங்கத்தை போலதான். தங்கத்தின் விலை உயர உயர தங்கப் பத்திரத்தின் மதிப்பும் உயரும். இதுபோக, ஆண்டுக்கு 2.50% வட்டியும் கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்