ஆப்நகரம்

டீ ஏலத்தில் உலக சாதனை! ஒரு கிலோ ரூ.40,000க்கு விற்பனை

கவுகாத்தி: அசாமில் விளைந்த டீ ஒரு கிலோ ரூ.40,000க்கு விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 24 Aug 2018, 7:56 pm
கவுகாத்தி: அசாமில் விளைந்த டீ ஒரு கிலோ ரூ.40,000க்கு விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil RTS1XFA5.


அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற டீ ஏலத்தில் கோல்டன் நீடில் ரகத்தைச் சேர்ந்த டீ ஒரு கிலோ ரூ.40,000 விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதனை அசாமில் டீ விற்பனையில் புகழ்பெற்ற நிறுவனமான அசாம் டீ டிரேடர்ஸ் வாங்கியுள்ளது.

விலை உயர்ந்த இந்த ரக தேயிலையை மிகவும் கவனமாக பறிக்க வேண்டும். இதில் தங்க முலாம் பூசி, வெல்வெட் போல மென்மையாக தயாரிப்பதால் விலை மிகவும் அதிகம்.

கவுகாத்தியில் உள்ள தேயிலை ஏலமிடும் மையத்தில் வழக்கமாக இதுபோன்ற ஏலங்கள் நடைபெறும். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஏலத்தில் மனோகரி கோல்டு டீ ஒரு கிலோ ரூ.39,001க்கு விற்கப்பட்டது. இதைவிட அதிக விலைக்கு விற்பனையாகியுள்ள கோல்டன் நீடில் டீ அதிக விலைக்கு விற்பனையான டீ என்ற புதிய உலக சாதனையையும் சொந்தமாக்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்