ஆப்நகரம்

சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி உயர்வு.. ரிஸ்க் எடுக்காதவர்களுக்கு நல்ல காலம்!

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய அரசு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 1 Jul 2022, 12:36 pm
ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்கின்றனர். எனினும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பெரும்பாலும் ஃபிக்சட் டெபாசிட், சிறு சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில், இந்த முறை சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil good days ahead for risk averse investors and indian govt expected to hike small savings schemes interest rates for july september 2022
சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி உயர்வு.. ரிஸ்க் எடுக்காதவர்களுக்கு நல்ல காலம்!


​சிறு சேமிப்பு திட்டங்களில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு என்பதே ஒரே பதில். நாம் போடும் பணம் பாதுகாப்பாக இருக்கும். சொல்லப்பட்ட வட்டி விகிதத்தின்படி வருமானம் கிடைக்கும். எனவே, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு சிறு சேமிப்பு திட்டங்கள் ஒரு நல்ல சாய்ஸ்.

​வட்டி நிர்ணயம்

சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்திய அரசு வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது. இதன்படி, தற்போது ஜூலை - செப்டம்பர் காலத்துக்கான வட்டி விகிதம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​வட்டி உயர்வு

கடந்த பல மாதங்களாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், இந்த முறை வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்திய அரசின் 10 ஆண்டு பத்திரங்களின் லாபம் 7.46% ஆக உயர்ந்துள்ளது. எனவே சிறு சேமிப்பு திட்டங்களுக்கு இனி அதிக வட்டி கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிறு சேமிப்பு திட்டங்கள்

  1. தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (SB)
  2. தேசிய சேமிப்பு நிரந்தர வைப்பு நிதி (FD)
  3. தபால் அலுவலக தொடர் வைப்பு நிதி (RD)
  4. மாத வருமானத் திட்டம் (MIS)
  5. சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (SCSS)
  6. பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
  7. செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA)
  8. தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC)
  9. கிசான் விகாஸ் பத்திரம் (KVP)

​எப்படி முதலீடு செய்வது?

தபால் அலுவலகங்கள் வாயிலாக சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்