ஆப்நகரம்

தங்கம் விலை: விலைச் சரிவா இல்லை விலையேற்றமா? நீங்களே பாருங்க!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

Samayam Tamil 30 Oct 2020, 6:01 pm
சென்னையில் இன்று தங்கம் விலை 56 ரூபாய் குறைந்துள்ளது. இந்த மாதத் தொடக்கம் முதலே தங்கத்தில் தொடர்ந்து விலையேற்றம் காணப்படுகிறது. இந்த வாரத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விலையேற்றம் காணப்பட்டது. பின்னர் மீண்டும் குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...
Samayam Tamil good news for gold buyers check gold rate in chennai today 30th october 2020
தங்கம் விலை: விலைச் சரிவா இல்லை விலையேற்றமா? நீங்களே பாருங்க!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (அக்டோபர் 30) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,734 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,741 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று 37,928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 56 ரூபாய் குறைந்து 37,872 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.5,121லிருந்து இன்று ரூ.5,114 ஆகக் குறைந்துள்ளது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 40,968 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 56 ரூபாய் குறைந்து 37,872 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,969 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,739 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,740 ஆகவும், கேரளாவில் ரூ.4,715 ஆகவும், டெல்லியில் ரூ.4,911 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,901 ஆகவும், ஒசூரில் ரூ.4,742 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,742 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.64.30லிருந்து இன்று ரூ.65.20 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 65,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்