ஆப்நகரம்

இது ஒன்னும் அமெரிக்கா இல்ல.. ஊழியர்களை தொட முடியாது.. ஐரோப்பாவில் திணறும் நிறுவனங்கள்!

ஐரோப்பாவில் பலமான சட்டங்களால் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடியாமல் திணறும் நிறுவனங்கள்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 6 Apr 2023, 12:46 pm
அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு ஐரோப்பிய நாடுகளில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியாமல் கூகுள், அமேசான் போன்ற டெக் நிறுவனங்கள் அல்லாடி வருகின்றன.
Samayam Tamil tech firms
tech firms


அமெரிக்காவை சேர்ந்த கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் என பெரிய டெக் நிறுவனங்கள் ஏராளமான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன. உதாரணமாக, கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 12000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்தது. அதேபோல அமேசான் நிறுவனம் மொத்தம் 27000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்தது.

அமெரிக்காவில் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதில் டெக் நிறுவனங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. அமெரிக்காவில் நிறுவனங்கள் ஏராளமான ஊழியர்களை மொத்தமாக ஆட்குறைப்பு செய்ய முடியும். ஆனால், ஐரோப்பாவில் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடியாமல் கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் திணறி வருகின்றன.

ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பாதுகாப்பான தொழிலாளர் சட்டங்கள் அமலில் இருக்கின்றன. எனவே அந்த சட்டங்கள் தொழிலாளர்களுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே தொழிலாளர் நலன் சார்ந்த குழுக்களிடம் ஆலோசனை நடத்தாமல் ஊழியர்களை பணிநீக்கமே செய்ய முடியாத சூழலை ஐரோப்பிய நாடுகளில் கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் சந்திக்கின்றன.

குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தொழிலாளர் சட்டங்கள் அமலில் இருக்கின்றன. இதனால் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியவில்லை. மாறாக, ஊழியர்கள் தாமாகவே வெளியேறும்படி நிறுவனங்கள் ஊக்குவித்து வருகின்றன.

அவ்வகையில், அதிக இழப்பீட்டு தொகை உள்ளிட்ட சலுகைகளை வழங்கி ஊழியர்கள் தாமாகவே பணியில் இருந்து விலகும்படி அமேசான் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதேபோல கூகுள் நிறுவனமும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்